கார்த்திகை தீபத்திருநாள் அகல்விளக்கு விற்பனை ஜரூர்
உத்திரமேரூர்:இன்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் அகல் விளக்குகள் வைத்து வழிபடுவது வழக்கம்.உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு விற்பனை ஜரூராக நேற்று நடந்தது. இங்கு, மடக்கு விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு, துளசி மாட விளக்கு, பிள்ளையார் விளக்கு ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.ஒரு அகல் விளக்கு 5 ரூபாய்க்கும், 5 விளக்குகள் கொண்ட ஒரு செட் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை, உத்திரமேரூர், பெருநகர், திருப்புலிவனம், மானாம்பதி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாங்கி சென்றனர். இது குறித்து விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது : உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அகல் விளக்கு செய்து, இங்கு வந்து விற்பனை செய்து வருகிறோம். பல ரகத்தில் விளக்குகள் இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.