உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

 வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவார விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் 20வது ஆண்டின், நான்காவது வார சோமவாரமான நேற்று, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நடன ஆசிரியை பிரபாவதி ஹரிஹரன், மகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை