உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  போந்துார் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேகம்

 போந்துார் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் மதுரை வீரன் கோவிலில், வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சியில், பொம்மியம்மாள், வெள்ளையம்மான் சமேத மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. பல்வேறு அபிஷேகம் மற்றும் யாகசாலை புஜையை தொடர்ந்து, வரும் 30ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள், கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் உற்றி, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடக்க உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !