உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா ஜன.,20ம் தேதி அன்று, வெகுவிமரிசையாக துவங்கியது. நேற்று, காலை கலசப் புறப்பாடு நடந்தது. காலை, 9:50 மணிக்கு விமானத்தின் மீது, சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை இந்திரா நகரில், பவானி அம்மன் கோவில் உள்ளது. நேற்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கலசப் புறப்பாடு, காலை 9:25 மணி அளவில் விமானத்தின் மீது, சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில், பூதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், காலை 10:45 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, உக்கல் கிராமம், மடாவளம் பகுதியில் காமாட்சி அம்பாள் கோவில் உள்ளது. புதிய மூன்று ராஜகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அதன் கும்பாபிஷேக விழா நேற்று, காலை 10:30 மணி அளவில் வெகுவிமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ