| ADDED : ஜன 09, 2024 12:25 AM
செங்கல்பட்டு : தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களில், பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.இதனால் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில், செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கிடங்கல் பகுதியை சேர்ந்த அஜய், 22, என்பவரை கைது செய்து, கடந்த அக்., 28ம் தேதி சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, அவர் மீது மூன்று செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டருக்கு ரயில்வே எஸ்.பி., பரிந்துரை செய்தார்.இதையேற்று, அஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ராகுல்நாத் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார். பின், புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் வழங்கினர்.