| ADDED : ஜன 09, 2024 12:33 AM
கூடுவாஞ்சேரி : புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்திற்குள், எந்த இடத்திலும் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பயணியர் சிரமம் அடைந்தனர்.வடசென்னை பகுதியில் இருந்து வந்த பயணி ஒருவர் கூறியதாவது:சொந்த ஊரான மதுரைக்கு செல்ல, வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தேன்.பயண கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்துக்கொள்ளாலாம் என, இங்கு வந்து விட்டேன். ஆனால், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பேருந்து நிலையத்தில், ஒரு இடத்தில் கூட ஏ.டி.எம்., சேவை வைக்கப்படவில்லை. பேருந்து நிலைய வளாகம் முழுதும் தேடியும், எங்கேயும் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தாதது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின், பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, ஊரப்பாக்கம் சென்று பணம் எடுத்து வந்தேன்.பயணியர் எல்லா நேரத்திலும் கையில் பணம் வைத்திருப்பது சாத்தியமில்லை. அது, பாதுகாப்பானதும் இல்லை. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்திற்குள், ஏ.டி.எம்., மற்றும் வங்கி சேவையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.