| ADDED : பிப் 13, 2024 04:05 AM
இளையனார்வேலுார் : காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி 6 நாட்கள் லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெறும்.அதன்படி நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை விழா கடந்த 10ல் துவங்கியது. வரும் 15ல் நிறைவு பெறுகிறது.விழாவையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர்.விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தபாரதிதாசன், செயல் அலுவலர் சுரேஷ் உட்பட பலர் செய்துள்ளனர்.