உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு துவக்கம்

டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 479 வருவாய் கிராமங்கள் உள்ளன.விவசாயிகள் சாகுபடி செய்யப்படும் பயிர் குறித்த விபரம், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் பதிவேட்டில் எழுதி கொடுத்து வந்தனர்.தற்போது, டிஜிட்டல் சர்வே என அழைக்கப்படும் எண்ணும்மை பயிர் ஆய்வு முறையில், சாகுபடி புள்ளி அளிக்கப்பட உள்ளது.இதற்கு, கிராம வரைபடம் மற்றும் நேரடியாக நிலத்தில் சென்று, பயிர் சாகுபடி செய்திருப்பதை, அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை முறையில், சாகுபடி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.உதாரணமாக, ஒரு வருவாய் கிராமம் என, எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட புல எண்ணில், நெல் சாகுபடி செய்து உள்ளனர். அந்த நிலத்தில் நெல் இருந்தால் மட்டுமே சாகுபடி கணக்கிற்கு வரும். இல்லை எனில், சாகுபடி கணக்கிற்கு வராது.இனிமேல், நெல் சாகுபடி செய்யாத விவசாயிகள் நெல் சாகுபடி செய்தது போல பெறப்படும் அடங்கல் முறைகளும் செல்லுபடி ஆகாது.மேலும், குறிப்பிட்ட நிலத்தில், விவசாயி எந்த விதமான பயிர் செய்து உள்ளாரோ அது மட்டுமே கணக்கில் வரும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ