உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்

காஞ்சிபுரம், டகாஞ்சிபுரம் ஒன்றியம்கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வையாவூர்செல்லும் பிரதான சாலை மற்றும் வாலாஜாபாத்ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, நல்லுார்செல்லும் சாலையில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், அந்தந்த ஊராட்சி நிர்வாகம்சார்பில், தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இச்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகளை, இரு ஊராட்சி நிர்வாகமும் முறையாக பராமரிக்காததால், இரவு, பகல் என, தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிர்வதாக புகார் எழுந்துள்ளது.இதனால், மின்சாரம்விரயமாவதுடன், ஊராட்சி நிர்வாகத்தினர், மின் வாரியத்திற்கு கூடுதல்மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஊராட்சிநிதியும் விரயமாகிறது. மேலும், தெரு மின்விளக்குகளும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது.எனவே, கோனேரிகுப்பம் மற்றும் வையாவூர் ஊராட்சி நிர்வாகத்தினர், தெரு மின்விளக்குகளை முறையாக பராமரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை