உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விதிமுறைகளை மீதி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு நெல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

விதிமுறைகளை மீதி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு நெல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

உத்திரமேரூர்:காவனுார் புதுச்சேரி கொ ள்முதல் நிலையத்திற்கு, வியாபாரிகள் நெல்லை விற்பனைக்கு ஏற்றி வந்த லாரியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் பறிமுதல் செய்தனர். உத்திரமேரூர் ஒன்றியம், காவனுார் புதுச்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கொள்முதல் நிலையத்தில், விதிமுறைகள் மீறி வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு, விவசாயிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்படி, தமிழ்நா டு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள்வனிதா, காவனுார் புதுச்சேரி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வெளியூரில் இருந்து நெல்லை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று கொள்முதல் நிலையத்திற்கு வந்தது. அப்போது, லாரியில் இருந்த நெல் மூட்டைகள் குறித்து அதிகாரி விசாரணை மேற்கொண்டனர். காஞ்சியில் இருந்து வந்த வியாபாரிகளின் நெல் என தெரியவந்தது. உடனே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 190 நெல் மூட்டைகள் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை