உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் ஒயர் ஒரத்துார் சாலையில் அபாயம்

தாழ்வாக செல்லும் மின் ஒயர் ஒரத்துார் சாலையில் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பையில் இருந்து ஒரத்துார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியே நீலமங்கலம், குத்தனுார், ஏரிவாக்கம், காவனுார், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.போக்குவரத்து அதிகமாக உள்ள இச்சாலையில், அதிக இடங்களில் மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.இந்த சாலையோரம் மின்கம்பங்களின் வழியே செல்லும் மின் ஒயர், மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்துகள், எதிர்பாராத விதமாக மின் ஒயரில் உரசும் போது, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏதேனம் அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை