உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாண்டவ துாத பெருமாள் கோவில் பிப்., 15ல் மஹா கும்பாபிஷேகம்

பாண்டவ துாத பெருமாள் கோவில் பிப்., 15ல் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், 49வது திவ்யதேசமான, காஞ்சிபுரம் பாண்டவ துாத பெருமாள் கோவில் 'திருப்பாடகம் திவ்ய தேசம்' என அழைக்கப்படுகிறது.கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு துாதுவராக சென்றதால், பாண்டவ துாத பெருமாள் என அழைக்கப்படுகிறார்.பழமையான இக்கோவிலில் கடந்த 1989ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 35 ஆண்டுகளுக்கு பின் பிப்., 15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இதையொட்டி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.பிப்,, 13ல், ரக் ஷா பந்தனம், சக்தியாகர்ஷணம், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடக்கின்றன.பிப்., 15ல் காலை 8:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை