உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடில், திரவுபதியம்மன் சமேத தருமராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி, அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி தினமும், மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருவடிராயபுரம் முனுசாமி கவி வாசிக்கிறார்.விழாவின் மற்றொரு நிகழ்வாக நாளை முதல், தினமும், இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், வில் வளைப்பு என்ற தலைப்பில் மஹாபாரத நாடகம் துவங்குகிறது. நாளை மறுநாள் சுபத்திரை திருமணம் என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது.மஹாபாரத நாடகத்தின் முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் வேடமிட்டவர் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, மே 12ம் தேதியும், 18ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ