அத்தியூர் மேல்துாளியில் பராமரிப்பின்றி நுாலகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, அத்தியூர் மேல்துாளி கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில், 20 ஆண்டுகளாக பொது நூலகம் இயங்கி வந்தது.இங்கு, தினமும், 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் பொது அறிவு, போட்டித் தேர்வு தொடர்பான புத்தகங்களை படித்து வந்தனர்.இந்த நுாலகம் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.தற்போது, இக்கட்டடம் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இங்குள்ள 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பராமரிப்பின்றி, சிதறி கிடக்கின்றன.பொதுநூலகம் முறையாக பராமரிப்பு இல்லாததால், அரசு நிதியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் வீணாகி வருகின்றன.எனவே பொது நுாலகத்திற்கு,புதிய கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.