2 சிறுமியரிடம் அத்துமீறியவருக்கு அடி
படப்பை: பட ப்பை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் 5 மற்றும் 6 வயது சிறுமியர், அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றனர். அப்போது அங்கு போதையில் இருந்த சங்கர், 50, என்ற நபர், சிறுமியருக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து, நேற்று இரவு தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள், சங்கரை நையப்புடைத்து சிறுமியரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோமங்கலம் போலீசார் சங்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.