உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தர்மசாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

 தர்மசாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம்: தர்மசாஸ்தா கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில், புதிதாக தர்மசாஸ்தா கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு, கடந்த அக்டோபர் மாதம் கும்பாபிஷேக விழா நடந்தது. தினசரி மண்டல பூஜைகள் நடந்து வந்தன. மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான நேற்று, காலை 11:00 மணியளவில், கணபதி ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவர் தர்மசாஸ்தாவிற்கு கலச நீர் ஊற்றி, மண்டலாபிஷேகம் நிறைவு செய்தனர். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை