மேலும் செய்திகள்
முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம்
24-Sep-2025
ஓரிக்கை: காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு வசந்தம் நகர் எல்லையம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு ஓரிக்கை பாலாறு வசந்தம் நகரில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஆக., 28ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதில், மஹா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகன், வீரபத்திரர் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.
24-Sep-2025