உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவ சங்கம் 18 விருதுகளுக்கு தேர்வு

மருத்துவ சங்கம் 18 விருதுகளுக்கு தேர்வு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், வரும் 14, 15 தேதிகளில் சேலத்தில் மாநில மாநாடு நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தில், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையில், சிறந்த கிளை தலைவர் இணை வெற்றியாளர் விருது, காஞ்சிபுரம் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரனுக்கு வழங்கப்படுகிறது.மதிப்புறு செயலர் விருது டாக்டர் கா.சு.தன்யகுமாருக்கும், பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் விருது டாக்டர் எம்.நிஷா ப்ரியாவுக்கும் மற்றும் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தை 15 மருத்துவ நிபுணர்கள் என, மொத்தம் 18 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருது பிரிவுகளாக, இந்திய மருத்துவ சங்க காஞ்சி புரம் கிளை சார்பில், மருத்துவ மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு துவக்கியது. இதில், முனைப்புடன் பணியாற்றியது உள்ளிட்ட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக, விருதுகளுக்கு தேர்வாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை