போதை தீயணைப்பு வீரருக்கு மருத்துவ பரிசோதனை
காஞ்சிபுரம்:தீயணைப்பு வீரர் போதையில் பணிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைத்தில், தீயணைப்பு வீரராக காமராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாறுதலில் வந்துள்ளார். நேற்று, காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பகுதியில், தீயணைப்பு வாகனம் தயாராக இருந்துள்ளது. காமராஜ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, சக ஊழியர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தீயணைக்கும் வாகனத்தில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவசர தேவைக்கு பயன்படுத்த வேண்டிய தீயணைக்கும் வாகனத்தில், தனி நபர் ஒருவரின் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். ஏற்கனவே, பாம்பு பிடிக்க சென்றதால், பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது.