மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
4 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
4 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
5 hour(s) ago
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பணியாற்றியபோது, சாலை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதத் தொகையை பணமில்லா டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். மேலும், அபராதம் விதிக்கும் எஸ்.ஐ.,களுக்கு சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தில் வழங்கப்பட்ட கேமராக்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், நீண்ட நேரம் பயன்படுத்த முடியாமலும், கை தவறி கீழே விழுந்தால் உடைந்துவிடும் அளவிற்கும் இருந்தது.அதற்கு மாற்றாக, தற்போது புதிதாக 50 நவீன கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, அபராதம் விதிக்கும் எஸ்.ஐ.,களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது.அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர்,இரு நாட்களுக்கு முன் எஸ்.ஐ.,களிடம் கேட்டறிந்தார். அதற்கு, 'ஒரு முறை சார்ஜ் செய்தால், 24 மணி நேரமும் பயன்படுத்த முடிகிறது. கீழே விழுந்தாலும் கேமரா உடையவில்லை. சட்டையில் பொருத்துவதற்காக காந்தகம் பயன்படுத்துவதால் எளிதாக உள்ளது' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago