கண்காணிப்பு குழுவினர் இன்று காஞ்சியில் ஆய்வு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மத்திய, மாநில அரசு திட்டங்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.இந்த திட்டப் பணிகளை, மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை கண்காணிப்பது வழக்கம்.தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர், இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். காலையில், பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம். அதை தொடர்ந்து, வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்ய உள்ளனர் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.