மானாவாரி பருவ நெற்பயிர் வாலாஜாபாதில் செழுமை
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் மானாவாரி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர் கதிர் வந்த நிலையில் செழுமையாக உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக நெல் சாகுபடி முதன்மை விவசாயமாக இருந்து வருகிறது. நவரை பருவத்தை தொடர்ந்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிரை தற்போது இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதனிடையே, காரை, சீயட்டி, மேல்பொடவூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பருவத்திற்கு சாகுபடி செய்த நெற் பயிர் தற்போது கதிர் வந்த நிலையில் செழுமையாக உள்ளது.