வழிகாட்டி பலகை இல்லாததால் திசைமாறி செல்லும் வாகன ஓட்டிகள்
வாலாஜாபாத்:கரூர் கூட்டுச்சாலையில், மூன்று வழி பிரிவில் வழிகாட்டி பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் திசைமாறி செல்லும் நிலை உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேடல் அடுத்து ராஜகுளம் உள்ளது. ராஜகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் கூட்டுச்சாலை உள்ளது. கூட்டுச்சாலையில் இருந்து ஏனாத்துார் வழியாக காஞ்சிபுரம், புத்தகரம் வழியாக வாலாஜா பாத் பிரிந்து செல்லும் சாலைகள் உள்ளன. கூட்டுச்சாலை பகுதியில் வழிகாட்டி பலகை இல்லாததால், இந்த சாலை வழியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் திசைமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே, கரூர் கூட்டுச்சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பதோடு இணைப்பு சாலையின் மூன்று பகுதிகளிலும் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.