உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்

புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: நத்தாநல்லுார் சாலையில், ஏரி மண் குவிந்து, புழுதி பறப்பதால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீபத்தில், நத்தாநல்லுார் ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால், வாலாஜாபாத் - வண்டலுார் சாலை முழுதும், லாரிகளில் இருந்து மண் சிதறுகிறது. இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் சிதறி கிடக்கும் மண்ணால் நிலை தடுமாறி விழுகின்றனர். மேலும், அந்த மண் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் புழுதியுடன் பறக்கின்றன. எனவே, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணை, பெரியளவில் விபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ