உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பல்லாங்குழியான ஆரநேரி சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 பல்லாங்குழியான ஆரநேரி சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்: பல்லாங்குழியான ஆரநேரி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் போந்துார் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி கிராமத்தில், 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆரநேரி பிரதான சாலை வழியே ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வல்லம் -வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில் இருந்து, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் பிரதான பகுதியாக ஆரநேரி சாலை உள்ளது. இந்த சாலை, சில ஆண்டுகளாக சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் இந்த சாலை படுமோசமாக மாறியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி கள் பல்லாங்குழியான சாலையில் சென்று வருவதால், உடல் வலியால் அவதி அடைந்து வருகின்றனர். அதே போல், இரவு நேரத்தில் செல்லும் போது பல்லாங்குழியான சாலையில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை