உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முட்செடிகளால் அபாயம் வாகன ஓட்டிகள் அவதி

முட்செடிகளால் அபாயம் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்காடு கிராமத்தில் இருந்து அமரம்பேடு, கொளத்துார் வழியே, ஸ்ரீபெரும்புதுார், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமாக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து, சாலை வரை படர்ந்துள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, முட்செடிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன.மேலும், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை