தடுப்பு இல்லாத சிறுபாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, அண்ணா நெசவாளர் குடியிருப்பை ஒட்டியுள்ள அனுஷ்கா நகர், முரளி நகருக்கு செல்லும் சாலையின் குறுக்கே, மழைநீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.இப்பாலத்திற்கு இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. மேலும், மின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.