உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முறிந்து விழும் நிலையில் மின் கம்பம் படப்பையில் வாகன ஓட்டிகள் அச்சம்

முறிந்து விழும் நிலையில் மின் கம்பம் படப்பையில் வாகன ஓட்டிகள் அச்சம்

படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, அரசு பேருந்துகள், தொழிற்சாலை பேருந்துகள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகம் செல்கின்றன.இந்த சாலையில், படப்பை, ஆதனஞ்சேரியில் சாலையோரம், உயர் மின் அழுத்த ஒயர்களை தாங்கி நிற்கும் சிமென்ட் மின்கம்பம் சேதமடைந்து உள்ளது.இதன் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும்படி பலவீனமாக உள்ளது.இதனால், இந்த கம்பம் மீது வாகனங்கள் லேசாக உரசினாலோ அல்லது பலத்த காற்றடித்தாலோ முறிந்து விழும் ஆபத்து உள்ளது. அதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:உயர் மின் அழுத்த ஒயர்களை தாங்கி பிடிக்கும் கம்பம் என்பதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதற்கு முன், போர்கால அடிப்படையில், சேதமடைந்த இந்த மின் கம்பத்தை, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், படப்பை மின் வாரிய துறையினர் மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை