உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்: மேட்டுப்பாளையத்தில், சிறுபாலத்திற்கு தடுப்பு இல்லாமல் உள்ளதால், சாலை சந்திப்பில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஒரகடம் அடுத்த, பண்ருட்டியில் இருந்து, மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குண்ணம், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியே, ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரு கின்றனர். அதேபோல, வல்லக்கோட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதிக்கு செல்லும் தனியார் பேருந்து, வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் பேருந்துகள் ஏராளாமாக சென்று வருகின்றன. இந்த சாலையில், மேட்டுப்பாளையம் அருகே, வல்லக் கோட்டை செல்லும் சாலை சந்திப் பில் உள்ள சிறுபாலம் தடுப்பு இல் லாமல் உள்ளது. தொழிற்சாலை பேருந்துகள், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், தடுப் பு இல்லாத சிறுபாலத்தின் ஓரம் செல்லும் போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த சிறுபாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை