உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  புளியம்பாக்கம் மேம்பாலம் கீழ் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 புளியம்பாக்கம் மேம்பாலம் கீழ் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் புறவழிச்சாலையில், புளியம்பாக்கம் மேம்பாலம் கீழ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலையில், வாலாஜாபாத்திற்கான புறவழிச்சாலை புளியம்பாக்கம் அருகே துவங்குகிறது. புளியம்பாக்கம் பிரதான சாலையில் இருந்து சேர்க்காடு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழிதடத்தின் ஒரு பகுதியில் புறவழிச்சாலைக்கான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலையில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி சகதியாகிறது. இதனால், இச்சாலை வழியாக சேர்க்காடு, நேருநகர் மற்றும் வல்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வாலாஜாபாத் புறவழிச்சாலையில், புளியம்பாக்கம் மேம்பாலம் கீழ் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீரமைத்து விபத்து அபாயம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை