உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சியில் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில், சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நான்கு ராஜ வீதிகளில் ஒன்றான கிழக்கு ராஜ வீதி வழியாக பேருந்து நிலையம், ரயில் நிலையம், காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு ராஜ வீதியில் இருந்து குப்பு தெருவிற்கு செல்லும் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அப்பகுதியினர், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மரக்கட்டை ஒன்று வைத்துள்ளனர். இருப்பினும் கவனகுறைவாக நடந்து வரும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, கிழக்கு ராஜ வீதியில், சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை