உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலமடை சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பாலமடை சாலையோரத்தில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சியில் செவிலிமேடு - வெங்கடாபுரம் சாலையில் உள்ள பாலமடை பெரியார் நகர் வழியாக விப்பேடு, நரப்பாக்கம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இந்த சாலையின் குறுக்கே, மழைநீர் வெளியேறும் வகையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு, சிறுபாலம் உள்ள பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், இரவு நேரத்தில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலையோரம்உள்ள பள்ளத்தை சீரமைத்து, கால்வாய் உள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்