உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் அமைக்க முல்லை நகரினர் வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் அமைக்க முல்லை நகரினர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு, முல்லை நகரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு, எல்லப்பன் அவென்யூ, முல்லை நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழை நீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இத்தெருவில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவ - -மாணவியர் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, எல்லப்பன் அவென்யூ, முல்லை நகரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ