உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொற்பந்தல் ஊராட்சி தலைவருக்கு தேசிய நீர் விருது

பொற்பந்தல் ஊராட்சி தலைவருக்கு தேசிய நீர் விருது

உத்திரமேரூர்:மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில், பொற்பந்தல் ஊராட்சி தலைவருக்கு தேசிய நீர் விருது வழங்கப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, குடியிருப்புகளுக்கு, 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது, பொற்பந்தல் ஊராட்சியில், 100 சதவீதம் குடிநீர் வழங்கப்பட்டு, தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக விளங்குகிறது. இதற்காக, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில், புதுடில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த சுதந்திர தின விழாவில், பொற்பந்தல் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், 53, என்பவருக்கு, மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் சோமண்ணா, 'தேசிய நீர் விருது' வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ