உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  விடுபட்ட இடத்தில் நடைபாதை வேண்டும்

 விடுபட்ட இடத்தில் நடைபாதை வேண்டும்

கா ஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கருப்படிதட்டடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சாலையின் இரு ஓரங்களிலும், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாயின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதையில் இருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் வரை நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, கரியன்கேட் முதல் வெள்ளைகேட் மேம்பாலம் வரை விடுபட்ட இடத்தில் நடைபாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எல்.ரவி, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை