அரும்புலியூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் நீர் சொட்டும் நிலை ஏற்பட்டது.இதனால், புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அரும்புலியூரில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்ட கனிமவள நிதி மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதற்கான பணி தற்போது துவங்கி தீவிரமாக நடைபெறுகிறது.