| ADDED : பிப் 07, 2024 11:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகள் மற்றும் பழங்குடியின வகுப்பினர் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, முன்னுரிமையில் மானிய விலை சிமென்ட் வழங்கப்படுகிறது.அதேபோல, ஊராட்சிகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு, மானிய விலையில் சிமென்ட் வழங்கப்படுகிறது. இந்த சிமென்ட் பெறுவதற்கு, உரிய ஆவணங்களை கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்து, முன்னுரிமை அடிப்படையில் மானிய விலை சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், மானிய விலை சிமென்ட் பெறுவது தொடர்பாக, புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை தணிக்கை உதவி இயக்குனர், 044 -27239764 அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.