உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண் மருத்துவ முகாம்

கண் மருத்துவ முகாம்

முத்தியால்பேட்டை:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம், முத்தியால்பேட்டை ஊராட்சி ஏரிவாய் கிராமத்தில் நடந்து வருகிறது.இதில், நான்காம் நாள் நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் குமார்ஸ் கண் சிகிச்சை மையம் சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் முகாமை துவக்கி வைத்தார். கண் மருத்துவ நிபுணர் டாக்டர் மாயா சேகர், பொதுமக்களிடம் கண்தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து கண் மருத்துவ பரிசோதனை செய்து, கண் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் அருள்மொழி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ