உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடல் உறுப்பு தானம் அரசு சார்பில் மரியாதை

உடல் உறுப்பு தானம் அரசு சார்பில் மரியாதை

குன்றத்துார்:மாங்காடில், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு, அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.மாங்காடு நகராட்சி, சையத் சாதிக் நகரைச் சேர்ந்தவர் ரஷீத், 29; வெல்டர். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.ரஷீத் நடந்து சென்றபோது தவறி விழுந்து, தலையில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது.மேலும் ரஷீத் மூளைச்சாவு அடைந்ததால், பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் அளித்தனர்.'உடல் உறுப்புகளை தானம் அளிப்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது.இதன்படி, மாங்காடில் ரஷீத் உடலுக்கு, அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ