உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் அறுவடை செய்யும் பணி துவக்கம்

நெல் அறுவடை செய்யும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 15,000 ஏக்கருக்கு மேல், பின் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.கடந்த வாரத்தில் சில தினங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், கோவிந்தவாடி, திருமால்பூர், பெரிய கரும்பூர், வரதாபுரம், சிறுவள்ளூர், காரை ஊராட்சி, சீயட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.நீரில் மூழ்கிய நெற்கதிர் வயலில் இருந்து மழை நீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இரு தினங்களாக மழை இன்றி வெயில் அடித்து வருகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீரில் மூழ்கிய நெற்கதிர் மற்றும் நீரில் மூழ்காத நெற்கதிர்களை, பெல்ட் நெல் அறுவடை இயந்திரத்தில் அறுவடை செய்து வருகின்றனர்.இதில், மகசூல் குறையும் என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை