நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி துவக்கம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, அறுவடை செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க, அரசு சேமிப்பு கிடங்கு இல்லாமல் உள்ளது. எனவே, சேமிப்பு கிடங்கு கட்ட விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, 2024 ---- 25 நிதி ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சேமிப்பு கிடங்கு கட்டும் பணியை துவக்கி வைத்தார்.