பத்ரகாளி அம்மனுக்கு பஞ்சவர்ண காப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன், பஞ்சவர்ண காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று காலை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மன் பஞ்சவர்ண காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.