/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த ஐந்து மாதத்தில் பழுது
ஊராட்சி அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த ஐந்து மாதத்தில் பழுது
சாத்தணஞ்சேரி:சாத்தணஞ்சேரியில் புதியதாக கட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்த ஐந்து மாதத்திற்குள் மழைநீர் சொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பழைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து மார்ச்சில் திறப்பு விழா நடந்தது. இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்த ஐந்து மாதத்திற்குள் கட்டடத்தின் மேல் தளம் பழுதடைந்து, மழைநீர் சொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமான ஒரு சில பகுதிகளில் சிமென்ட் பூச்சு பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.