மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
4 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
4 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
4 hour(s) ago
ஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி துவங்கி இருப்பதால், நடப்பாண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா குறித்து கோவில் நிர்வாகம் சார்பில், முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.நேற்று முன்தினம் கொடியேற்றம் இன்றி, சுவாமி வெளிபுறப்பாடு இன்றி, பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா துவங்கியது. இதில், கோவில் மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் மட்டும் நடக்கிறது.இந்நிலையில், பங்குனி உத்திர விழாவுக்கு கோவிலில் வாழை மரம், பந்தல் போன்றவை கூட கட்டவில்லை எனக் கூறி, 20க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, கோவில் அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் நேற்று பேச்சு நடத்தினர். தொடர்ந்து, பந்தல், வாழை மரம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். சுவாமிக்கு பாரம்பரிய நகைகளை அணிவிக்கவும், உட்புறப்பாடு நடக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago