மேலும் செய்திகள்
சந்திப்பு பகுதியில் விபத்து அதிகரிப்பு
04-Jul-2025
பூந்தமல்லி:சிக்னல் அமைக்காததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், குமணன்சாவடி ஜங்ஷன் சாலையை பீதியில் கடக்கும் நிலை உள்ளது.பூந்தமல்லி, குன்றத்துார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணைக்கும் இடமாக குமணன்சாவடி உள்ளது. இங்கு, பேருந்து நிறுத்தம், வணிக கடைகள், திரையரங்கு மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணி காரணமாக, இங்கிருந்த சிக்னல் அகற்றப்பட்டது. மெட்ரோ ரயில் பணி முடிந்தும், சிக்னலை அமைக்காததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர், விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் பீதியில் செல்கின்றனர்.அகற்றப்பட்ட தானியங்கி சிக்னலை, மீண்டும் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
04-Jul-2025