மேலும் செய்திகள்
இருக்கை வசதி இல்லாமல் வாலாஜாபாதில் பயணியர் அவதி
4 minutes ago
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
20 minutes ago
சாலை விபத்தில் மூதாட்டி பலி
21 minutes ago
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா
21 minutes ago
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், தாலுகா அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது. உத்திரமேரூரில், பஜார் வீதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 73 வருவாய் கிராமங்களை சேர்ந்தோர், பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களுடைய இரு சக்கர வாகனங்களை, அலுவலக வளாகத்திலே நிறுத்தி வந்தனர். இதனால், அலுவலகத்திற்கு வந்து செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே, தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும், வாகன நிறுத்துமிடத்தை புதுப்பிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தாலுகா அலுவலக நிர்வாகத்தினர் பராமரிப்பு இல்லாமல் இருந்த, வாகன நிறுத்துமிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தை துாய்மைப் படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சாய்தள பாதைக்கு கான்கிரீட் அமைக்கும் பணியும் நேற்று நடந்தது. இரண்டு நாட்களில் வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வரும் என, உத்திரமேரூர் தாசில்தார் சுந்தர் தெரிவித்தார்.
4 minutes ago
20 minutes ago
21 minutes ago
21 minutes ago