ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த சிறப்பு கிராம சபை கூட்டங்களில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சி தலைவர் சரிதா தலைமையில் நடந்த கூட்டத்தில், கோவிந்தவாடி கால்வாய் தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வீடு கட்டுவதற்கு பல முறை மனு அளித்தும், அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கவில்லை.படுநெல்லி ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்திற்கு, கோவிந்தவாடி வருவாய் கணக்கில், 66 இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் துறை சமீபத்தில், வழங்கி உள்ளன.இந்த வீட்டுமனைகளுக்கு, கோவிந்தவாடி ஊராட்சி பெயரில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், 66 வீடுகள் கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இதை, படுநெல்லி ஊராட்சி பெயருக்கு மாற்றும் செய்து பணி ஆணை வழங்க வேண்டும்.மேலும், புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வீட்டு வரி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தீமானம் நிறைவேற்ற வேண்டும்.பூசிவாக்கம் ஊராட்சியில், பாபாசாகிப்பேட்டை கிராம பெயர் பலகை அமைக்க தடையில்லாத சான்று வழங்க வேண்டும். வாலாஜாபேட் என, ஆங்கில வார்த்தை வாலாஜாபாத் என, மாற்றி தர வேண்டும்.திருப்பருத்திகுன்றம் ஊராட்சி தலைவர் மலர்கொடி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு உரிமை திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.காலுார் ஊராட்சியில் பால் விற்பனை செய்ய கூட்டுறவு சங்கம் அல்லது ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.உத்திரமேரூர்: குண்ணவாக்கம் ஊராட்சியில்,எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நச்சுப்பேட்டை பகுதியில், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.காட்டாங்குளம் ஊராட்சியில், கனிம வள அறக்கட்டளை நிதி மூலம் சிமென்ட் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் களியப்பேட்டை காலனியில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.மதுார் மலை மீது அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்ல சிமென்ட் பாதை ஏற்படுத்த வேண்டும். காவிதண்டலத்தில், ஒரக்காடுபேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். சாத்தணஞ்சேரியில், இரவு நேர சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். அரும்புலியூரில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.வாலாஜாபாத்:திம்மராஜம்பேட்டையில், கால்நடை மருந்தகம் ஏற்படுத்த வேண்டும். சீயமங்கலம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும். புத்தகரத்தில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தணும்.ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் ஊராட்சி வாஞ்சுவாஞ்சேரி அமிர்தாக கார்டனில், விளையாட்டு பூங்கா, வெள்ளேரித்தாங்கல் கக்கன்ஜி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெருகளுக்கு சிமென்ட் கால்வாய். ராகாலம்மன் கோவில் தெருவில், சிமென்ட் சாலை ஆகிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வஞ்சுவாஞ்சேரி, கூழங்கல்சேரி, வைப்பூர் பகுதியில் ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மறறும் புதிய குடிநீர் குழாய் ஏற்படுத்த வேண்டும்.
9வது முறையாக எதிர்ப்பு
ஏகனாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், ஏகனாபுரம் முழுமையாக கபளீகரம் செய்து, விவசாய பெருங்குடி மக்களை அகதிகளாக்கும் பரந்துார் விமான நிலைய திட்டத்தை, மாநில அரசு கைவிட வேண்டும்.எந்த வகையிலும், விமான நிலைய திட்டத்தை ஏற்காமல், 9வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, 800 வது நாளாக இரவு நேரத்தில் போராடி வரும் கிராம மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என, வருத்தம் கிராம மக்கள் இடையே எழுந்துள்ளது. இதற்கு முடிவு எட்டுமா ? என, கேள்வியும் எழுந்துள்ளது.