உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீமைக்கருவேல மரங்களால் அக்கமாபுரம் செல்வோருக்கு சிரமம்

சீமைக்கருவேல மரங்களால் அக்கமாபுரம் செல்வோருக்கு சிரமம்

அக்கமாபுரம்:மதுரமங்கலம் அடுத்த, அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, நாகப்பட்டு கிராமம் வழியாக, பள்ளூர் - சோகண்டி சாலையை இணைக்கும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, அக்கமாபுரம், கண்டிகை, துளசாபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பூ மற்றும் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி சென்று, காஞ்சிபுரம் பகுதிக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இந்த சாலையின் ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால், அக்கமாபுரம்- - நாகப்பட்டு வழியாக காஞ்சிபுரத்திற்கு செல்வோருக்கு, முகத்தில் காயத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக, அக்கமாபுரம்- - நாகப்பட்டு சாலை இடையே, மின் விளக்கு வசதி இல்லாததால், காட்டுப்பன்றிகள் எந்த நேரத்தில் வாகனங்களை குறுக்கே வழி மறிக்கின்றன என, தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.எனவே, அக்கமாபுரம்- - நாகப்பட்டு இடையே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை