மேலும் செய்திகள்
இன்று இனிதாக
6 minutes ago
மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி
7 minutes ago
உத்திரமேரூர்: காட்டாங்குளத்தில் இரண்டு ஆண்டுகளாக, வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக உள்ளதால், வருவாய் துறை தொடர்பான சான்றுகள் உடனுக்குடன் பெறுதலில் சிக்கல் உள்ளதாக, அப்பகுதியினர் புலம்புகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில் காட்டாங்குளம், படூர் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர், இரண்டு ஆண்டு களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, ஓராண்டாக சிறுமையிலுார் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது, குண்ணவாக்கம் கிராம நிர்வாக அலுவலரும், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கூடுதல் பொறுப்பு வகிக்கும் வி.ஏ.ஓ.,விற்கு பணி சுமை, கூடுதல் துாரம் போன்ற சிரமங்களால், சரி வர அலுவலகம் வர முடியாத நிலை உள்ளது. தற்போது வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டுமே அலுவலகம் செயல்படுவதாகவும், மற்ற நாட்களில் மூடியே இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனால், காட்டாங் குளம் மற்றும் படூர் பகுதி மக்கள், வருவாய் துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதில் சிரமப் படுகின்றனர். எனவே, படூர், காட்டாங்குளம் வருவாய் கிராமத்திற்கு, முழு நேரமாக கிராம நிர்வாக அலுவலரை, விரைவாக நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
6 minutes ago
7 minutes ago