மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு
09-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 395 பேர் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பட்டா, ஆக்கிரமிப்பு, மகளிர் உரிமைத்தொகை, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக, 395 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். போராட்டம் குறைதீர் கூட்டம் நடந்த கூட்ட அரங்கின் வெளியே, சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கந்தவேலன் என்பவர், உறவினர்களுடன் நேற்று, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். 'போலி ஆவணம் மூலம் தங்கள் குடும்ப சொத்துக்களை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு வருவாய் துறையினர் ஆதரவாக செயல்படுகின்றனர்' என, கந்தவேலன் குற்றம் சாட்டினார். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். வருவாய் துறை அதிகாரிகள் வந்து, உங்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.
09-Sep-2025